| 245 | : | _ _ |a சந்தையூர் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a சந்தையூர் சலுப்ப பெத்தண்ண செட்டி அதிகாரம் (துரைத்தனம்) செய்து வந்தபோது அவனிடம் மாதம் 9 கலம் தானியக் கூலிக்கு வீரண்ணசேறுவை காவல்பணி செய்துவந்தான். சந்தையில் இருவருக்கும் சச்சரவு (சல்லியம்) ஏற்பட்டு வீரணன் சேர்வை சலுப் பெத்தண்ணனின் தலையை வெட்டி, ரத்தக்கைகளோடு இரவு நடுசாமத்தில் கூளப்ப நாயக்கர் முன்கொண்டு வந்து வைத்து சந்தையூரை கூளப்ப நாயக்கரின் பாளையப்பட்டு ஊராக்கினான். கூளப்ப நாயக்கரும், ராணுவமும் மகிழ்ந்து அவனுக்கு சத்தையூரைச் சேர்ந்த 18 பட்டி காவல் நாட்டாண்மை அளித்தனர். அவனது சாதி கம்பளக்காறனாகவும். தென்மலை குத்தகை சாதிக் கம்பளக்காறனாகவும் அங்கீகரித்து பட்டயம் எழுதிக் கொடுத்தனர். கூளப்ப நாயக்கர் பாளையப்பட்டு ஏரிகள் (கண்மாய்) பாசனத்தில் 30 கலம் விதைப்பாடு நஞ்சை நிலமும் 60 சங்கிலி புஞ்சை நிலமும் தரப்பட்டது. 18 பட்டி கிராமத்து வீடுகள் ஒவ்வொன்றும் 1 பணம், 3 குறுணி தானியம் தருவதென்றும், ஆடு உள்ளவர்கள் 1 கிடாய் தருவதென்றும், அரண்மனைக்கு அடுத்து இரண்டாவதாக, இவனுக்கு கோயில்களில் தீர்த்தம் திருமாலை தருவதென்றும் முடிவாயிற்று. சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஒம்படைக்கிளவியில் சதிரகிரி சிவன், பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2013 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மதுரை, சந்தையூர், கூளப்ப நாயக்கர் |
| 752 | : | _ _ |a சந்தையூர் |c சந்தையூர் |d மதுரை |f பேரையூர் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / பாளையப்பட்டு நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 11.2578879 |
| 915 | : | _ _ |a 77.1073454 |
| 925 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00038 |
| barcode | : | TVA_CPS_00038 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |